பாகிஸ்தான் வீரர் சாதனை!

இலங்கை அணியுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் ஷா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 150 வீக்கட்டுக்களை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 150 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.இதன்படி, சுழற்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கட்டுக்களை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.இதற்கு முன்னர் இந்த பட்டியலில் 28 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிளாரி க்ரிமேட் முதலிடத்தில் இருந்தார்.இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்து யசீர் ஷா முதலிடம் பெற்றுள்ளார்.
Related posts:
உலகக் கிண்ண தொடர்: இந்திய அணி விபரம் வெளியானது!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
IPL தொடர் - 4 ஆவது முறையாகவும் மகுடம் சூடியது சென்னை அணி!
|
|