பாகிஸ்தான் வீரரின் சாதனையுடன் இணைந்த இலங்கை வீரர்!
Thursday, March 23rd, 2017
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான ரங்கன ஹெரத், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வக்கார்யூனிசின் சாதனையை சமன் செய்துள்ளார்.
வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதே போன்று பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார்யூனிஸ் 373 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். தற்போது அச்சாதனையை ஹெராத் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


