பாகிஸ்தான் செல்லும் இலங்கை அதிகாரிகள்!
Wednesday, October 25th, 2017
எதிர்வரும் 29ஆம் திகதி லாஹூரில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான 20க்கு 20போட்டியின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அவதானிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நாளை லாஹூர் மைதானத்தின் பாதுகாப்பு நிலைமைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் தங்குமிடங்கள் அவர்கள் பயணிக்கும் பாதைகள் ஆகியவற்றையும் இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இப்போட்டியில் இலங்கையின் 20க்கு 20 அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களை முன் வைத்தே அவர்கள் இப் போட்டியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


