பாகிஸ்தான் கபடி அணிக்கு தடை!

இந்தியாவில் 12 நாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ண கபடிப் போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
கபடி உலகக்கிண்ணப் போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தொடரும் நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இது சரியான நேரமில்லை என்றார்.
பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு செயலர் ரானா முகமது சர்வார் கூறுகையில், பாகிஸ்தான் இல்லாமல் கபடி உலகக்கிண்ண போட்டிகள் பிரேசில் இல்லாத கால்பந்து உலகக்கிண்ணம் போன்றது. இந்த விவகாரத்தை விவாதிக்க கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம் என்றார்.
Related posts:
ஸ்லோவேனியா கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் யு.ஈ.எப்.ஏ-இன் புதிய தலைவராக தெரிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம்வகிக்கும் வீரர்களின் விவரம்!
மத்தி – சென். ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் இன்று!
|
|