பயிற்சிக்கு திரும்பினார் மலிங்கா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்.
காயத்தால் அவதிப்பட்டு வந்தாலும் அவர் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.
ஆனால் அவரை மீண்டும் அழைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம், பரிசோதனைக்கு பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என அவருக்கு ஆலோசனை வழங்கியது. இதனால் அவர் எந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடர் நடந்து வரும் நிலையில், அவர் ஆர். பிரேமதாச மைதானத்தில் களமிறங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.இந்த தொடருக்கு அடுத்து இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடரிலும் மலிங்கா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் எதிர்காலம் குசால் மெண்டிஸ்- மத்தியூஸ்!
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜாக்பாட்!
இந்தியத் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
|
|