பந்து தலையை தாக்கினால் மாற்று வீரர்களை பயன்படுத்தலாம் – சர்வதேச கிரிக்கட் கவுன்சில்!

போட்டிகளின் போது தலையில் பந்து தாக்கி வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள சர்வதேச கிரிக்கட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தலையில் பந்து தாக்கி வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாற்று வீரர்களை பயன்படுத்தும் இந்த திட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
எல்லா வடிவிலான ஆண்கள், பெண்கள் சர்வதேச போட்டிக்கு மட்டுமின்றி, முதல்தர போட்டிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இந்த விவகாரத்தை கவனிக்க ஒவ்வொரு அணியிலும் தனியாக மருத்துவ பிரதிநிதி இருக்க வேண்டும். அவர் தான் காயமடைந்த வீரரின் உடல்தகுதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவை வென்றது இங்கிலாந்து!
21 ஆம் நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக முரளி - விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை!
நியூஸிலாந்து அணி 9 இலக்குகளால் வெற்றி!
|
|