பங்களாதேஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்

Tuesday, December 12th, 2017

சண்டிக ஹத்துருசிங்கவின் பதவி விலகலை அடுத்து புதிய பயிற்றுவிப்பாளராக யாரை நியமிப்பது என்கின்ற கேள்வி நிலவி வருகின்றது.

கத்துக்குட்டியாக இருந்த பங்களாதேஸ் அணிக்கு சிறப்பான பங்களிப்பையும் அடித்தளத்தையும் இட்டுச்சென்ற சண்டிகா ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பிற்கு நிகரான ஒருவரை புதிய பயிற்றுவிப்பாளராக உள்வாங்கும் முயற்சியில் பங்களாதேஸ் கிரிக்கட் வாரியம் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இதுவரைக்கும் ரிச்சர்ட் பைபஸ் மற்றும் ஃபில் சிமன்ஸ் ஆகியோரை அணுகியுள்ள போதிலும் இவர்களை விடுத்து வேறு சில பயிற்றுவிப்பாளர்களையும் அணுக முடிவெடுத்துள்ளார்கள். குறிப்பாக தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிபவர்களை தொடர்புகொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளனர். கிரிக்கட் வல்லுனர்களின் கருத்துப்படி கேரி கேஸ்டனை பயிற்றுவிப்பாளராக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன.

Related posts: