பங்களாதேஷ் செல்கிறது இலங்கை !
Thursday, January 4th, 2018
இரு சுற்றுத் தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 13ஆம் திகதி பங்ளாதேஷ் பயணமாகவுள்ளது.
ஒரு மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத் தொடரிலும் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு சுற்றுத் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையுடன் பங்ளாதேஷ் ஸிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. பங்ளாதேஷ் அணிக்கு எதிரான சுற்றுத் தொடரில் 02 டெஸ்ட் போட்டிகளும், 02 T-20 போட்டிகளும் உள்ளடங்குகின்றன.
ஜனவரி 31ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகும். முதலாவது T-20 போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெற்றியின் இரகசியம் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர்!
இலங்கை அணியிலிருந்து குசல் பெரேரா, சிறிவர்தன வெளியேற்றம்!
கிரிக்கெட் மைதானத்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் - என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் !
|
|
|


