நுவான் பிரதீப் விளைாடுவதில் சந்தேகம்!
Tuesday, August 2nd, 2016
இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (01) பயிற்சியின் போது தொடைப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமா பிரதீப் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் புதன்கிழமை இடம்பெறும் உடற்தகுதி பரிசோதனையின் பின்னரே இவர் விளையாடுவதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் இவர் அடுத்த போட்டியில் விளையாடாத சந்தர்ப்பத்தில் உபாதையிலிருந்து குணமாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அல்லது புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ அல்லது அஷித பெர்னாண்டோ விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இலங்கை அணி அடுத்த போட்டியில் பிரதான 3 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
Related posts:
சுழல் பந்துவீச்சுக்கு பயந்தால் இந்தியா செல்ல வேண்டாம் - பீற்றர்சன்!
அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!
வீனஸ் வில்லியம்ஸ் விலகல்!
|
|
|


