நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Friday, November 11th, 2016

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் . 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆராம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்தில், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெறவில்லை. கப்தில் தவிர, இந்தியத் தொடரில், நியூசிலாந்து அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற லுக் றொங்கி, ஜீதன் பட்டேல், இஷ் சோதி டவ் பிரேஸ்வெல் ஆகியோரும் குழாமில் இடம்பெறவில்லை.

இதேவேளை, காயம் காரணமாக, மிற்செல் சான்ட்னர், மார்க் கிரேய்க், அடம் மில்ன், மிற்செல் மக்நெலகன், கொலின் மன்றோ, ஜோர்ஜ் வேர்க்கர் ஆகியோர் குழாம் தெரிவு செய்யப்படும்போது கணக்கிலெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், துடுப்பாட்டவீரர் ஜீட் றாவல், சகலதுறை வீரர் கொலின் டி கிரான்ட்ஹொம் ஆகியோர் புதுமுக வீரர்களாக குழாமில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர, கடந்த 2012ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய சகலதுறை வீரர் டொட் அஸ்டில், குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே, தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் சுற்றுப்பயண குழாமில் இடம்பெற்றிருந்த றாவல், கப்தில்லுக்கு பதிலாக அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக் குழாம்: கேன் வில்லியம்சன் (தலைவர்), டொட் அஸ்டில், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹொம், மற் ஹென்றி, டொம் லதாம், ஹென்றி நிக்கொல்ஸ், ஜிம்மி நீஷம், ஜீட் றாவல், டிம் சௌதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜெ.வட்லிங்.

800x480_IMAGE58079489

Related posts: