நான்கு நாட்கள் தூங்கவில்லை – வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்!

இங்கிலாந்து 444 ஓட்டங்கள் குவித்தது ஒரு கெட்ட கனவு. அதை நினைத்து நான்கு நாட்கள்தூங்கவில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 110 ஓட்டங்கள் வாரி வழங்கினார். இதுகுறித்து ரியாஸ் கூறுகையில், இந்த போட்டியில் மோசமாக பந்து வீசியது என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்ததால் என்னால் நான்கு ஐந்து நாட்கள் தூங்கமுடியவில்லை.
இவ்வளவு ஓட்டங்கள் விட்டுக்கொடுத்ததற்காக நான் பயப்படவில்லை. ஆனால், இந்த போட்டி நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்க்க ஒருவேளை திருப்புமுனையாகக்கூட இருக்கலாம். இந்த போட்டி எனக்கும், அணி வீரர்களுக்கும் ஒரு கெட்ட கனவு என கூறியுள்ளார்.
Related posts:
|
|