நவம்பர் 17ஆம் திகதி ஹபீஸுக்குச் சோதனை!
Thursday, November 10th, 2016
பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், தனது பந்துவீச்சு முறையை, நவம்பர் 17ஆம் திகதி சோதிக்கவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேணில், அவர் இவ்வாறு தனது பந்துவீச்சுப் பற்றிய சோதனைக்கு உள்ளாகவுள்ளார்.
அவரது பந்துவீச்சுப் பற்றிய சோதனை, லோபொரோவிலும் கார்டிஃபிலும் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சோதனை பற்றிய அறிக்கைகள் கிடைப்பதற்குத் தாமதாகும் என்பதால், பிறிஸ்பேண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி பங்குபற்றவுள்ள தொடருக்கு முன்னதாக, அவ்வறிக்கை கிடைக்குமென எதிர்பார்த்தே, பிறிஸ்பேண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.ஹபீஸின் பந்துவீச்சு, 2015ஆம் ஆண்டு ஜூலையில், தடை செய்யப்பட்டிருந்தது.

Related posts:
20க்கு20 போட்டிக்கான டிக்கட்டில் மோசடி!
ரஃபேல் நடால் வெற்றி!
துப்பாக்கிச் சுடுதல் - தங்கம் வென்றார் அபூர்வி சண்டேலா!
|
|
|


