நட்சத்திரங்களின் உதைப்பந்தாட்டம் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியன்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான நட்சத்திரங்களின் உதைப்பந்தாட்ட தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது.
நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக்கல்லூரியை எதிர்த்து தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மோதியது. இதில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 03:00 என்ற கோல்கணக்கில் சம்பியனானது. இப்பாடசாலை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக இவ்வருடம் சம்பியனானதால் இத்தொடருக்கான சுற்றுக்கேடயத்தை சொந்தமாக்கியது. 3அம் இடத்திற்கான போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 02:00 என்ற கோல்கணக்கில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை வெற்றிபெற்று 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.
Related posts:
லசித் மாலிங்கவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமானது !
இலங்கை அணியில் சிறந்தவர் ஹேரத்!
மும்பை அசத்தல் வெற்றி!
|
|