நட்சத்திரங்களின் உதைபந்தாட்ட மானிப்பாய் இந்து ஹற்றிக் வெற்றி!

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான நட்சத்திரங்களின் உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது, குறித்த போட்டியின் இறுதியாட்டமானது அண்மையில் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் மு.செவ்வஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
இதில் மானிப்பாய் இந்துக்கல்லூரியை எதிர்த்து மகாஜன கல்லூரி இறுதிப்போட்டியில் மோதிக் கொண்டது. இப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. குறித்த பாடசாலையானது தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக வெற்றி பெற்றதனால் தொடருக்கான சுற்றுக்கேடயத்தை தனதாக்கிக் கொண்டது.
Related posts:
இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்!
இந்திய - இங்கிலாந்துது முதலாவது போட்டி கைவிடப்பட்டது!
லசித் மாலிங்கவினால் கிரிக்கெட் மாறியது!
|
|