தொடர் தோல்வி: மன உழைச்சலில் ரசல் ஆர்னோல்ட்!

Friday, September 8th, 2017

இலங்கை அணி பெறும் தொடர் தோல்விகள் காரணமாக கிரிக்கட் வர்ணனையாளர் அறையில் இத்தினங்களில் தான் மிகவும் கடினமான நாட்களை கழிப்பதாக சர்வதேச கிரிக்கட் வர்ணனையாளரும்,இலங்கை அணியின் முன்னாள் வீரருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

9-0 என்ற கணக்கில் நிறைவு பெற்ற இலங்கைக்கான இந்திய அணியின் சுற்றுப்போட்டி தொடர்பில் பிபிசி செய்திச் சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.’மிகவும் கடினம் , நாம் எப்போதும் முயற்சிப்பது நல்ல விடயங்களை ஏற்படுத்த , குறைப்பாடுகளை ஏற்படுத்த அல்ல. நாட்டை போன்று வீரர்களையும் ஊக்கவிக்கவே முயற்சி செய்கிறோம். அனால் வீரர்களிடம் இருந்து உரிய விடயம் வராவிட்டால் அது மிகவும் கடினமாகிவிடும்.’.இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு அணிக்காக இதை விட சிறந்த பங்களிப்பை தர முடியும் என்பது எனது மட்டுமன்றி சர்வதேச கிரிக்கட் விமர்சகர்களின் எண்ணமாக உள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து அணியை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு மற்றையவர்களை விடவும் அணி வீரர்களுக்கே உள்ளதாக தெரிவித்த ஆர்னல்ட் , இலங்கை கிரிக்கட் அணி தமது திறமைக்கு அமைய விளையாட வில்லை எனவும் தெரிவித்தார்.இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதும் , இலங்கை அணி வீரர்கள் தமது திறமைக்கு ஏற்ப விளையாட வில்லை என கண்ணை மூடிக் கொண்டேனும் கூற முடியும் என போட்டி வர்ணனையாளர் ரசல் ஆர்னல்ட் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.

Related posts: