தொடரை வென்றது இலங்கை அணி!
Friday, July 30th, 2021
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ராகுல் சஹர் 04 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
000
Related posts:
|
|
|


