தொடரைக் கைப்பற்றிது இலங்கை!  

Monday, February 19th, 2018

பல்வேறு தோல்விகளால் துவண்ட இலங்கை அணி, பங்களாதேஷ் சுற்றுலா சென்று சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடனான முக்கோணத் தொடரின் சம்பியனானதோடு, இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியிருந்த நிலையில், 2 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரையும் 2-0 என கைப்பற்றியதன் மூலம் அனைத்து தொடரையும் தன் வசமாக்கி, 2018ஆம் ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியை வெற்றி கொண்ட இலங்கை அணி, ரி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 210 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 18.4 ஓவர்களில் 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. அவ்வணி சார்பில் மஹ்முதுல்லாஹ் 41 ஓட்டங்களையும், தமீம் இக்பால் 29 ஓட்டங்களையும், மொஹமட் சபியுத்தீன் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 4 பந்துகளை மாத்திரம் வீசி 3 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ஷெஹான் மதுசங்க 2 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய, தசுன் சானக, அமில அபோன்சொ, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடந்த வருடம் முதல் பல்வேறு தோல்விகளால் துவண்ட இலங்கை அணி, பங்களாதேஷ் சுற்றுலா சென்று சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடனான முக்கோணத் தொடரின் சம்பியனானதோடு, இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியிருந்த நிலையில், 2 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரையும் 2-0 என கைப்பற்றியதன் மூலம் அனைத்து தொடரையும் தன் வசமாக்கி, இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு 3 வருடங்களாக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்த சந்திக ஹத்துருசிங்க, கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெற்றி கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஹத்துருசிங்க, பங்களாதேஷ் அணி தொடர்பான தனது அனுபவம், இலங்கை அணியை வழி நடத்துவதற்கு இலகுவாக அமைந்ததாக தெரிவித்தார்.

Related posts: