தொடக்க வீரராக களம் இறங்க பெரிய இதயம் வேண்டும்- தவான்!

Saturday, July 23rd, 2016

2013-ம் ஆண்டு தனது 27 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானவர் ஷிகர் தவான். மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடிய தவானுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர் சிறப்பாக அமையவில்லை. இலங்கை அணிக்கெதிராக சதம் அடித்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறவில்லை. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து விளையாடும்போது தவான் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 8 இன்னிங்சில் அரைசதம் அடிக்காமல் ஃபார்மின்றி தவித்து வந்தார்.

இதனால் தவானை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வந்தது. இதற்கிடையே தவான் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வரும் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். மேலும், தனது உடலை நோக்கி வரும் பவுன்சரையும் சந்தித்த சிரமப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பொதுவாக பவுன்சருக்கு ஒத்துழைக்கும். இதனால் இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்படும் முன் பெங்களூரில் உள்ள முகாமில் பயிற்சி எடுத்துக்கொண்டது.

அப்போது பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் பவுன்ஸ் பந்துகளை எவ்வாறு சமாளிப்பது குறித்து கேட்டறிந்து பயிற்சி மேற்கொண்டார். அவர் சில டிப்ஸ்களை வழங்கினார். குறிப்பாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வரும் பந்தை எப்படி அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் விடுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதை நேற்றுமுன்தினம் முதல் நாள் ஆட்டத்தில் தவான் வெளிப்படுத்தினார். இது அவருக்கு பெருமளவில் கைக்கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வேகப்பந்து வீச்சாளார் கேப்ரீயல் 145 கி.மீட்டர் வேகத்தில் தவானுக்கு பந்து வீசி நெருக்கடி கொடுத்ததார். குறிப்பாக தவானை நோக்கி பவுன்சரால் தாக்கினார். இதில் சற்று திண்டாடினாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். அதன்பின் நிலைத்து நின்று விளையாடி அவர் 84 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தன் மீதுள்ள விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும், தொடக்க வீரராகளம் இறங்குவது எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்குவது கடினமானது என்று நினைக்கிறேன். அதற்கு பெரிய இதயம் தேவை. புதிய ஆடுகளம் மற்றும் புதிய பந்தில் பந்து வீச்சாளர்கள் முழு எனர்ஜியுடன் தொடக்கத்தில் தாக்குவார்கள். அதை சமாளிக்க நீங்கள் ஏராளமான பந்தை கீப்பர் கைக்கு விடவேண்டும். மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு சிறந்த வகையில் ஆட்டத்திறன் இருக்க வேண்டும்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக பொறுமை தேவை. ஆனால், புதிய பந்துகளை சொந்த முயற்சியிலேயே எதிர்கொள்ள வேண்டும். விஜய் அவுட்டானது சிறப்பான பந்து. அந்த பந்து மிகவும் வேகமாக விஜய் நோக்கி வந்து விட்டது. கேப்ரியல் அபாரமாக பந்து வீசினார். அவரிடம் இருந்து நான் தப்பியது அதிர்ஷ்டம்.பந்தை விக்கெட் கீப்பரிடம் விடுவதில் நான் முன்பை விட தற்போது சிறப்பாக செயல்படுகிறேன். என்னுடைய ஷாட் தேர்வு, புஜாரா, கோலியின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்திற்கு உதவிகரமாக இருந்தது’’ என்றார்.

Related posts: