தேசியமட்ட பளுதூக்கல் ஆசிகா மூன்று சாதனை!
Monday, June 25th, 2018
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாதனைகளைப் படைத்தார்.
44 ஆவது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆசிகா 63 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறைப் போட்டியில் 76 கிலோ பளுவையும் கிளீக் அன்ட் ஜக் முறையில் 97 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 173 கிலோ பளுவையும் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த மூன்றும் அவரால் படைக்கப்பட்ட புதிய சாதனைகளாக அமைந்துள்ளன.
Related posts:
சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து விலகினார் குசேல் ஜனித் பெரேரா!
ஓராண்டாக வீட்டுக்கு செல்லவில்லை - நட்சத்திர வீரர் ரஷீத் கான் உருக்கம்!
வலுவான நிலையில் நியூசிலாந்து!
|
|
|


