தென்னாபிரிக்க தொடர் மிகவும் சவாலானதே – சிமித்!

Thursday, February 1st, 2018

ஆஸ்திரேலிய அணி நான்கு ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர் மிகவும் சவாலாக அமையும் என்று தெரிவித்தார் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்ரீவ் சிமித்.

மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்தத் தொடர் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முடிவடைகிறது. தொடர் தொடர்பாக நேற்றுமுன்தினம் கருத்துப் பகிர்கையிலேயே சிமித் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை சிறிது நேரம் பார்த்தேன். ஆஸ்திரேலியா – தென்னாபிரிக்கா இடையிலான தொடர் உண்மையிலேயே பரபரப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வேகப்பந்து வீச்சை பலமாகக் கொண்ட இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளன. துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். தென்னாபிரிக்காவில் தலை சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை எதிர்த்து நாங்கள் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். வேகப்பந்து வீச்சுடன் கேசவ் மகாராஜ் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார். தென்னாபிரிக்க அணியினர் ஆடுகளத்தைச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன் நின்று விடாது இரண்டு மாறுபட்ட வழிகளோடு களமிறங்குவார்கள். அவர்கள் எப்படிப்பட்ட ஆடுகளத்தைத் தயார் செய்தாலும் அதற்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொள்வோம். இந்தத் தொடர் எமக்கு சவாலாக இருக்கும் என்பதை மறுக்கவில்லை என சிமித் மேலும் தெரிவித்தார்.

Related posts: