தென்னாபிரிக்க சுற்றுக்கான இலங்கை அணி தயார்!
Saturday, January 28th, 2017
தென்னாபிரிக்க கிரிக்கட் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் சுற்றுக்காக சுழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வென்டர்சே இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த சுற்றுப்போட்டிக்காக 16 போட்டியாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைமைத்துவத்தை உபுல் தரங்க ஏற்றுள்ளார்.
சஜித் பத்திரன, விக்கும் சஞ்சய மற்றும் லஹிரு குமார ஆகியோரும் இலங்கையின் சர்வதேசஒருநாள் போட்டி குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.இலங்கை மற்றும் – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (28) போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


