தென்னாபிரிக்க அணி முன்னிலை!

Saturday, November 5th, 2016

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 102 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய போது அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக குயின்டன் கொக் மற்றும் எல்கர் களமிறங்கினர்.

இருவரும் நல்ல ஆரம்பம் வழங்குவார்கள் என்ற நிலையில் டி கொக் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.இவர் முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.பின்னர் ஹசிம் அம்லா களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவ்வணிக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.அவர் கடந்த போட்டியிலும் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

எல்கருடன் இணைந்தார்.ஜேபி டுமினி இருவரும் முறையே —46,34 ஓட்டங்கள் குவித்து களத்தில் உள்ளனர்.இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகள் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த்தில் தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வென்று முதலில்துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 242 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக டிகாக் 84 ஓட்டங்கள் எடுத்தார். மிச்செல் ஸ்டாக் 4 விக்கெட்டும், ஹசல்பும் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய அவுஸ்திரேலியாவுக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 21 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்கள் எடுத்து வோர்னர் 73 ஓட்டங்களுடனும், ஷான் மார்ஷ் 29ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வோர்னர்-மார்ஷ் ஜோடி பொறுமையாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தது. ஷான் மார்ஷ் அரை சதம் அடித்தார். வோர்னர் சதத்தை நெருங்கி கொண்டிருந்தார். ஆனால் அவர் 97 ஓட்டங்களுக்கு ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வோர்னர் தனது 17 டெஸ்ட் சதத்தை தவறவிட்டமை விசேட அம்சமாகும்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து கவாஜா களம் வந்தார். இந்த ஜோடி நிலைத்து நிற்கவில்லை. ரபடா பந்தில் கவஜா (4 ) போல்ட் ஆனார்.பின்னர் 63 ஓட்டங்கள் பெற்ற ஷோன் மார்ஷ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவ்வணியின் வோக்ஸ் 27 ஓட்டங்களுடனும் பீட்டர் நெவில் 23 ஓட்டங்களுடனும் சிடில் 18 ஓட்டங்கள் பெற்றதே அதிக படியான ஓட்ட எண்ணிக்கையாகும்.ஏனைய வீரர்கள் தென்னாபிரிக்க பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க தினறி ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவ்வணி சகல விக்கெட்டையும் இழந்து 244 ஓட்டங்களை குவித்தது.பந்து வீச்சில் பிலான்டர் 4 விக்கெட்டையும் மகராஜ் 3 விக்கெட்டையும் ரபடா 2 விக்கெட்டையும் ஸ்டெயின் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர். தென்னாபிரிக்க அணியை விட இரு ஓட்டங்கள் பெற்றது அவுஸ்திரேலிய அணி. இன்று போட்டியின் 3 ஆவது நாளாகும்.

25col4533

Related posts: