தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
Wednesday, February 7th, 2018
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தனது 34ஆவது ஒருநாள் சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 40 ஓவர்களில் 179 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இதனடிப்படையில் இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Related posts:
தரவரிசையில் முதலிடம் பெற்ற யாசீர் ஷா!
இந்திய அணிக்கு மஹெல ஜெயவர்தன பாராட்டு!
சுதந்திரக் கிண்ண ரி-20 போட்டிகள் மார்ச் 06 ஆரம்பம்!
|
|
|


