துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் கோஹ்லி இனை பின்தள்ளி ஸ்மித் !

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்து வீச்சாளர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாம் இடத்தைப் தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போர்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் 9 விக்கட்டுகளை வீழ்த்தியதன் ஊடாக அவர் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், மூன்றாம் இடத்தை இலங்கை அணியின் ரங்கன ஹேரத் பெற்றுள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் முதலாம் இடத்தை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் இந்தியாவின் செட்டிஸ்வர் புஜாராவும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜோய் ரூட் பிடித்துள்ளார்.
Related posts:
ஊக்க மருந்து சர்ச்சை : 28 ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பம்!
உலகக்கிண்ண கால்பந்து : செனகல் அணி வெற்றி!
பளுதூக்கல் : ஆசிகாவுக்கு கறுப்புப் பட்டி!
|
|