துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்து அசத்தலான வெற்றி!

Saturday, March 3rd, 2018

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி அபார வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இந்த ஆட்டம் இடம்பெற்றது. மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி 41.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 143 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக அனோசன் 46 ஓட்டங்களையும், சூரியகாந்தன் 30 ஓட்டங்களையும், காதுசன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சந்துரு 4 இலக்குகளையும், கோமைந்தன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர். 144 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 14 பந்துப் பரிமாற்றங்களில் இலக்குகள் எதையும் இழக்காது அபார வெற்றிபெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சந்தோஸ் 89 ஓட்டங்களையும், மினுக்சன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related posts: