தினேஷ் சந்திமால் 13 ஆவது டெஸ்ட் சதம்!

Monday, July 11th, 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் Dinesh Chandimal தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் Steven Smith ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும் Marnus Labuschagne 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக Prabath Jayasuriya 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.

தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக Dinesh Chandimal ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும் Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும் Kusal Mendis 85 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: