தடுமாறும் இலங்கை!
Monday, August 14th, 2017
பல்லேகலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தார்.
இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், ஆறு விக்கெட்கள் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்தது. தவான் 119 ஓட்டங்களும் ராகுல் 85 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சகா 13 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்து களமிறங்கிய சகா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ஓட்டங்களிலும் மொஹ்மட் சமி 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ஓட்டங்களை குவித்தது.
உணவு இடைவேளைக்கு முன்னர் வரை அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து தில்ருவான் பெரராவிடம் பிடிகொடுத்து மொத்தம் 96 பந்துகளில் 108 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை அணி பந்துவீச்சில் லக்ஷ்ன் சந்தகன் ஐந்து விக்கெட்களையும் மலிந்தா புஷ்பகுமாரா 3 விக்கெட்களையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
Related posts:
|
|
|


