டூ பிளஸிஸ் விளையாடுவதில் சந்தேகம்!
Wednesday, July 5th, 2017
இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் தலைவர் பஃப் டூ பிளஸிஸ் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான அவர், தமது முதற் குழந்தையின் பிரசவத்துக்காக நாடு திரும்பிய நிலையில், உரிய தினத்துக்குள் மீண்டும் இங்கிலாந்துக்கு பயணிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது
எதிர்வரும் 6ம் திகதி இந்த போட்டி ஆரம்பமாகின்ற நிலையில் அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் தலைமை தாங்கவுள்ளார்.
டூ ப்ளஸி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்க அணியுடன் மீண்டும் இணைந்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தற்கொலைக்கு முயற்சித்த இந்திய வீரர்!
ஜிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை!
இங்கிலாந்து வீரரை புகழும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்!
|
|
|


