டி-20 உலகக் கிண்ண தொடர் – சூப்பா் 12 சுற்றில் இலங்கை, நெதா்லாந்து!

Friday, October 21st, 2022

டி-20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை, நெதா்லாந்து அணிகள், முதல் சுற்றை நிறைவு செய்து 12 சுற்றுக்குத் தகுதிபெற்றன.

முதல் சுற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற குரூப் ‘ஏ’-வின் கடைசி இரு ஆட்டங்களில் இலங்கை – நெதா்லாந்தையும், ஐக்கிய அரபு அமீரகம் – நமீபியாவையும் வீழ்த்தின.

இதை அடுத்து அந்த குரூப்பில் 3 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளுடன் இலங்கையும், நெதா்லாந்தும் முறையே முதலிரு இடங்களை உறுதி செய்து சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறின.

முன்னதாக, முதல் ஆட்டத்தில் தோற்ற ஆசிய சாம்பியனான இலங்கை, அடுத்த இரு ஆட்டங்களிலும் அருமையாக வென்று முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது. மறுபுறம் முதலிரு ஆட்டங்களில் வென்ற நெதா்லாந்து, கடைசி ஆட்டத்தில் தோற்றது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் நமீபியாவை வீழ்த்தி, நெதா்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற வகை செய்திருக்கிறது.

தற்போது சூப்பா் 12 பிரிவில் இலங்கை அணி, குரூப் 1 இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தானுடன் இணைய, நெதா்லாந்து அணி குரூப் 2 இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்துடன் சோ்ந்திருக்கிறது.

நெதா்லாந்தை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, முதலில் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய நெதா்லாந்தை அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியாவை வென்று, இப்போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுக்க, பின்னா் நமீபியா அதே ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களே எட்டியமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: