ஜேர்மன் கால்பந்தாட்ட தலைவர் சுவன்ஸ்டைகர் ஒய்வு!
Thursday, September 1st, 2016
உலக கால்பந்தாட்ட சாம்பியனான ஜேர்மன் அணியின் தலைவர் பஸ்டியான் சுவென்ஸ்டைகருக்கு உணர்வுபூர்வமான ப்ரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஹங்கேரி அணிக்கெதிரான சிநேகபூர்வ போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்றிருந்த, அவர் பின்லாந்து அணிக்கெதிராக நேற்றைய தினம் நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.
ஜேர்மன் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 121 போட்டிகளில் விளையாடியுள்ள பஸ்டியான் சுவென்ஸ்டைகர், இதுவரை சர்வதேச போட்டிகளில் 24 கோல்களை போட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட ஜேர்மன் அணியில் இடம்பிடித்திருந்த சுவென்ஸ்டைகர், ஜேர்மன் கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் அனுபமிக்க நான்காவது வீரர் என்ற பெருமையுடன் ஒய்வுபெற்றுள்ளார்
ஜேர்மன் அணிக்காகவும் ஜேர்மனி இரசிகர்களுக்காகவும் விளையாட கிடைத்தமை மிகுந்த கௌரமான ஒன்றெனவும் சுவென்ஸ்டைகர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியை அவர் ஆரம்பித்த போது விளையாட்டு அரங்கில் ஒன்று கூடியிருந்த 30 ஆயிரம் இரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் வழங்கியிருந்தனர்.
Related posts:
|
|
|


