ஜயசூரிய இராஜினாமா?
Friday, February 10th, 2017
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts:
|
|
|


