சோதனையில் தப்பித்த ஒரேயொரு ரஷ்ய வீராங்கனை!

Monday, August 15th, 2016

தடகள சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு வழங்கியிருந்த தடையை நீக்கியிருக்கும் உலக விளையாட்டு தீர்ப்பாயம், ரஷ்யாவின் நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை தாரியா க்லிஷினா, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊக்க மருந்து பயன்பாடு சர்ச்சையால் ரஷ்ய வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தடையிலிருந்து தப்பித்திருக்கும் ஒரேயொரு தடகள வீராங்கனையான க்லிஷினா, போட்டியிட இருந்த மூன்று நாட்களுக்கு முன்னர், வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த தடைக்கு எதிராக க்லிஷினா செய்த மேல்முறையீட்டை விசாரித்த விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயம் அவருக்கு சாதகமாக  உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Related posts: