செஸ் ஒலிம்பியாட் தொடர் – இணை சம்பியனான இந்தியா மற்றும் ரஷ்யா அறிவிப்பு!
Monday, August 31st, 2020
செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44ஆவது பருவக்கால போட்டிகள் இணையம் ஊடாக நடந்தது. 163 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை எதிர்கொண்டது. இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருநாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய செஸ் அணியை எண்ணி நாட்டு மக்கள் மிகவும் பெருமைப்படுவதாக குடியரசு தலைவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்ய செஸ் அணிக்கும் குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.பி.எல். போட்டிக்கு நிகராக வருகிறது மகளீர் IPL.!
விண்கலத்தில் மிதந்தபடி விளையாடி குதூகலித்த நாசா வீரர்கள்!
சீனாவில் அவுஸ்திரேலியாவை வென்றது ஆர்ஜென்டீனா - அதிவிரைவான கோல் புகுத்திய மெஸி!
|
|
|


