செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கிய பரிசோதனை நிலையத்திற்கு மூடுவிழா!
Wednesday, November 16th, 2016
தவறான தகவல்களின் அடிப்படையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டு தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு பரிசோதனைகள் மேற்கொண்ட கட்டார் அரச பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு, சர்வதேச ஊக்கமருந்து ஒழுக்காற்று நிறுவனம் தடை விதித்துள்ளது.
குறித்த தடைக்கான அறிவுறுத்தலில் குறிப்பிடப்படுவதாவது; குறித்த நிறுவனமானது சர்வதேச ரீதியில் நடாத்தப்படும் பரிசோதனைகளின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவித்துள்ளதாகவும், இதனால் வீர வீராங்கனைகளுக்கு நம்பிக்கை இல்லாத் தன்மை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனைக்கு ஆளாகிய குசல் ஜனித் பெரேராவின் முதல் சோதனை குறித்த பரிசோதனை ஆய்வுகூடத்திலேயே இடம்பெற்றது.
என்றாலும், குறித்த குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து உபயோகிக்கவில்லை என அதன் பிற்பாடு வெளிவந்த பரிசோதனைகளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


