“சி” பிரிவு பெண்களுக்கான எறிபந்தாட்டம் இளவாலை கன்னியர்மடம் ம.வி.சம்பியன்!
Thursday, November 3rd, 2016
இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்டச்சங்கம் நடாத்திய “சி” பிரிவு பெண்களிற்கான எறிபந்தாட்டப் போட்டியில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியால அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட எறிபந்தாட்டப் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை அம்பாந்தோட்டை வெவரவெவ மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
“சி” பிரிவு பெண்களிற்கான இறுதியாட்டத்தில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியால அணியை எதிர்த்து இராஜசிங்க கல்லூரி அணி மோதியது. 3 செற்கள் கொண்ட போட்டியில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியால அணி 25:17, 25.18 என்ற நேரடி செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. “ஏ” பிரிவினருக்கான போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆண், பெண்கள் அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மீண்டும் தேசிய அணியில் மெஸ்ஸி!
மீண்டும் கிரிக்கெற்றில் ஒரு சோகம்: மைதானத்திலேயே உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்!
ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி - இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!
|
|
|


