சில நாடுகள் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பூரண அங்கத்துவத்தை இழக்கக்கூடும்?

Thursday, February 23rd, 2017

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பூரண அங்கத்துவத்தை இழக்கக் கூடிய அபாயத்தில் சில நாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையில் பூரண உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகள் சில வேளைகளில் அந்த பூரண உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு தடவையும் பூரண உறுப்புரிமை மீளாய்வுக்கு உட்படுத்தப்படக் கூடியவகையில் யாப்பில் திருத்தங்களைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தோல்விகளைத்தழுவி வரும் மேற்கிந்தியதீவுகள், சிம்பாப்பே போன்ற நாடுகள் பூரண உறுப்பு நாடு என்ற அந்தஸ்த்தை இழக்க நேரிடலாம் எனவும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற நாடுகள் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

ICC1

Related posts: