சிறந்த FIFA வீரர் விருது வென்றார் மெஸ்ஸி!

Tuesday, February 28th, 2023

நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பிபா அமைப்பு விருது அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டி போட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் பெத் மீட், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் அலெக்ஸியா புட்டெல்லாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

மொராக்கோவின் யாசின் பவுனோ, ஆர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ், பெல்ஜியத்தின் திபாட் கோர்டோஸ் ஆகியோர் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில் எமிலியானோ மார்டினெஸுக்கு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: