சிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக்!

Wednesday, October 12th, 2016

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து, கடந்த ஜூன் மாதம் அகற்றப்பட்ட டேவ் வட்மோரை ஸ்ட்ரீக் பிரதியீடு செய்கிறார்.

கடந்த புதன்கிழமை (05) இடம்பெற்ற நேர்காணலில் பங்கேற்ற ஸ்ட்ரீக்கின் சக அணி வீரரான அன்டி பிலிக்னெட்‌‌, தென்னாபிரிக்கர்களான பீற்றர் கிறிஸ்டன், ஜஸ்டின் சுமொன்ஸ் ஆகியோருக்கு மேலதிககமாகவே ஸ்ட்ரீக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் உலகக் கிண்ணத்துக்கு, சிம்பாப்வே அணி தகுதி பெறுவதை உறுதி செய்வதே ஸ்ட்ரீக்கின் பணியாகவுள்ளதோடு, இந்தியன் பிறீமியர் லீக்கில், குஜராத் லயன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வட்மோர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், இடைக்கால பயிற்சியாளராக கடமையாற்றிய மகாயா என்டினி, பந்துவீச்சுப் பயிற்சியாளராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, துடுப்பாட்ட ஆலோசகராக, லான்ஸ் குளூஸ்னர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே, முதன்முதலாக, பயிற்சியாளராக ஸ்ட்ரீக் கடமையாற்றவுள்ளார். இதற்கு முன்னர், அலன் புட்சரின் கீழ், 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை, சிம்பாப்வேயின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஸ்ட்ரீக் கடமையாற்றியிருந்தார்.

201605271600343278_Heath-Streak-steps-down-as-Bangladesh-bowling-coach_SECVPF

Related posts: