சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டுவைன் ஸ்மித் ஓய்வு!
Friday, March 3rd, 2017
2004 ஜனவரி 2-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான, தனது முதல் போட்டியிலேயே சதமடித்த ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஸ்மித், அதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
கடைசியாக 2015 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினார் ஸ்மித். அதன்பிறகு சர்வதேச போட்டியில் விளையாடாதபோதும், ஐபிஎல், கரீபியன் லீக், வங்கதேச லீக் போன்ற டி20 போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வந்தார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடி வரும் ஸ்மித், வரும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
105 ஒரு நாள் போட்டி மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 2,142 ரன்கள் குவித்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 320 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ந்து நிலவி வரும் பல்வேறு குழப்பங்களால் திறமை வாய்ந்த வீரரான டுவைன் ஸ்மித், சர்வதேசப் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வருகின்றது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் !
இலங்கை அணியின் மிகச் சிறந்த விரர்கள் இவர்கள் தான் - பயிற்சியாளர் சந்திக ஹத்ருசிங்கா!
87 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வி!
|
|
|


