சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சச்சின் !

இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10ம் இலக்கத்தை வேறு யாருக்கும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்று இன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீரர்கள் யாரும் இந்த இலக்கத்தை தெரிவு செய்யாவிட்டால், அவர்களை பலவந்தப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு சச்சின் ஓய்வுப் பெற்றதன் பின்னர், சார்துல் தாக்கூர் என்ற வீரர் மாத்திரம் இந்த இலக்கத்தைக் கொண்ட ரீஷேர்ட்டை அணிந்து விளையாடினார். இதனால் அவர் இந்திய இரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர்: சிந்து பதிலடி!
கோஹ்லியை மிரள வைத்து ரஷித் தேர்வு - நம்பவே முடியவில்லை என உற்சாகம்!
'ஆசிய கிண்ண கிரிக்கட்' ஆப்கானை வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி!
|
|