சம்பியன் பட்டம் வென்றமை அற்புதமான சந்தர்ப்பிம் –  பெடரர்

Tuesday, July 18th, 2017

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருப்பது அற்புதமான நிகழ்வெனஇ உலகின் 3ஆம் நிலை வீரரும் சுவிஸ்சர்லாந்தின் முன்னணி வீரருமான ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில்இ குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் 8வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகுடம் சூடினார்.

இந்த வெற்றியின் பின் கருத்து தெரிவித்த ரோஜர் பெடரர் “இந்த விம்பிள்டன் தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் சம்பியன் கிண்ணத்தை கையில் ஏந்தியிருப்பது உண்மையிலேயே மாயாஜாலம் போன்று உள்ளது. இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டு அரையிறுதியில் தோற்ற பிறகு விம்பிள்டனில் மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.

ஏனெனில் 2014 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டிகளில் ஜோகோவிச்சிடம் தோற்று இருந்தேன். ஆனாலும் மீண்டும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் 8வது முறையாக விம்பிள்டனை வென்று இங்கு நிற்கிறேன். இது ஒரு அற்புதமான நிகழ்வு” என கூறினார்.

Related posts: