சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்!

Monday, June 11th, 2018

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு அணியின் பயிற்சியளர் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணிக்கு டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார்.

அதனால் முன்னாள் வீரர்கள் டபிள்யூ வி ராமன் மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

Related posts: