சங்கக்காரா- ஜெயவர்த்தன அசத்தல் – டாக்கா அணி அசத்தல் வெற்றி!

Sunday, November 27th, 2016
வங்கதேச பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டாக்கா டைனமிட்சஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேச பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாக்கா டைனமிட்சஸ் கோமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வென்ற டாக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் சேர்த்தது.

சங்கக்காரா 33 ஓட்டங்களும், ஜெயவர்த்தனே 31 ஓட்டங்களும் குவித்தனர். அணித்தலைவர் சாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் எடுத்தார்.இதன் பின்னர் 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கோமிலா விக்டோரியன்ஸ் சிறப்பாக தொடங்கினாலும், பிறகு விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.இதைத் தொடர்ந்து டாக்கா அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாக்கா அணி தரப்பில், வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என டாக்கா அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.குல்னா டைட்டன்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

497031245GC00060_Sri_Lanka_

Related posts: