சங்கக்காராவை குறி வைக்கும் பாகிஸ்தான் இளம் வீரர்!

Friday, October 7th, 2016

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி ‘ஹாட்ரிக்‘ சதம் அடித்தார். அவர் 106 பந்துகளை சந்தித்து 117 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.அவர் ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களும், 2வது ஒருநாள் போட்டியில் 123 ஓட்டங்களும் எடுத்திருந்தார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 3 சதங்களை எடுத்த 8வது வீரர் என்ற பெருமை பெற்றார்.இந்தப் பட்டியலில் தொடர்ச்சியாக 4 சதங்கள் (வங்கதேசம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஸ்காட்லாந்து) விளாசிய சங்கக்காரா முதலிடத்தில் இருக்கிறார்.

ஜாகீர் அப்பாஸ், சாயிட் அன்வர், கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி காக், ரோஸ் டெய்லர் ஆகியோர் தலா 3 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதேபோல் தொடக்க வீரரும், அணித்தலைவருமான அசார்அலியும் சதம் அடித்தார். அவர் 109 பந்தில் 101 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44 ஓவரில் 172 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராம்தின் 37 ஓட்டங்களும், பிராத் வெயிட் 32 ஓட்டங்ளும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது. ஏற்கனவே டி20 தொடரையும், பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: