சங்ககாரா அசத்தல் சதம்!

இலண்டனில் நடைபெற்று வரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சங்ககாரா அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் ரோயல் லண்டன் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் சரே அணியும், ஹன்சைபர் அணியும் மோதின. முதலில் ஆடிய ஹன்சைபர் அணி நிர்ணயிக்கபட்ட ஓவர்களில் 237 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து சரே அணி விளையாடியது. அந்த அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாராமாக விளையாடி சதமடித்தார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 124 ஓட்டங்களை(2 சிக்ஸர், 13 பவுண்டரி) குவித்து சரே அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
Related posts:
மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
மாவட்ட கரப்பந்தாட்டத் தொடர் மெதடிஸ் பெண்கள் அணி சம்பியன்!
இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!
|
|