சகித்து கொள்ள முடியவில்லை – பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை!

Thursday, July 4th, 2019

உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்பை தவறவிடும் சூழலில், இந்தியா இங்கிலாந்து ஆட்டத்தை சகித்து கொள்ள முடியவில்லை என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்றிசியில்  வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர்  இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 338 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவிற்கு வெற்றி இலக்கை நிர்ணையித்தது இங்கிலாந்து.

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியை பலர் விமர்சித்தனர். காரணம் இந்த போட்டியில் இந்திய அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டிருந்தது. மேலும், இந்த போட்டியில் வென்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதியில் முன்னேறுவது எளிது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது, இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய விதத்தை எங்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாதது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இந்தியா வெற்றி பெற்றிருந்தால், எங்களுக்கான கதவு திறந்திருக்கும்.இன்றைய போட்டியில் நியூசிலாந்து, எங்களுக்காக இங்கிலாந்தை வீழ்த்தும் என நம்புகிறோம். நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் எங்களின் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் எழும். என்று தெரிவித்துள்ளார்.

Related posts: