கோஹ்லி ஆவேச பதில்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தான் டக் அவுட் ஆனதற்கு காரணம் துடுப்பாட்ட வீரருக்கு எதிர்புறம் உள்ள பெரிய கருப்பு திரை பக்கத்தில் சிலர் கவனச்சிதறல் ஏற்படும் வகையில் அமர்ந்திருந்தாக பெங்களூரு அணியின் தலைவர் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.இப்போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த எளிதான இலக்கான 131 ஓட்டங்களை எட்டமுடியாமல், கோஹ்லி அணி 49 ஓட்டங்களுக்குள் சுருண்டு மிக மோசமான தோல்வியை சந்தித்தது
இதில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர். அதிலும் கோஹ்லி முதல் ஓவர் முதல் பந்திலே வெளியேறினார்.இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
தான் பேட்டிங் தொடங்கு வதற்கு முன்னரே, துடுப்பாட்ட வீரருக்கு எதிர்புறம் உள்ள பெரிய கருப்பு திரையின் பக்கத்தில் சிலர் கவனச்சிதறல் ஏற்படும் வண்ணம் அமர்ந்துள்ளனர்.அவர்களை உடனே அகற்றும் படி கூறியதாகவும், இருப்பினும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அதை சரியாக செய்யவில்லை.அவர்களை அகற்றவில்லை. இந்நிலையில் முதல் பந்திலேயே பரிதாபமாக அவுட்டாக நேரிட்டதாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|