கோஹ்லியின் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்க வீரர்!

குறைந்த இன்னிங்சில் அதிக சதமடித்த விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா புதிய சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா அபாரமாக விளையாடி சதமடித்தார்இ அவர் அடித்த 26-வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதம் இதுவாகும். இதை அவர் 154 இன்னிங்சில் விளையாடி செய்துள்ளார்.இதற்கு முன்னர் இதே 26 சதங்களை 166 இன்னிங்ஸில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அடித்திருந்தார். தற்போது அதை விட குறைந்த போட்டிகளில் 26 சதங்களை எட்டி கோஹ்லியின் சாதனையை ஆம்லா தகர்த்தெறிந்துள்ளார்.
Related posts:
|
|