குணரத்ன அதிரடி : ஆஸி மண்ணில் தொடரை வென்றது இலங்கை !
Sunday, February 19th, 2017
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரை வென்றுள்ளது
இன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 174 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணிக்கு அரம்பம் மோசமாக அமைந்தது. இருந்து கப்புக்கெதர மற்றும் குணரட்ன ஆகியோரது இணைப்பாட்டம் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது.
அதிரடியாக விளையாடிய கப்புக்கெதர 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து பதட்டமான நிலைகாணப்பட்ட போதும் குணரத்ன தொடர்ந்தும் அதிரடிகாட்டியதன் மூலம் போட்டியின் இறுதிப் பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதில் குணரத்த ஆட்டமிளக்காது 5 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள உள்ளடங்கலாக 84 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Related posts:
|
|
|


