குசலுக்கான செலவை ஐ.சி.சி.செலுத்தாது?

Thursday, May 19th, 2016

குசல் ஜனித் பெரே­ராவை ஊக்­க­ம­ருந்து குற்­றச்­சாட்­டி­­லி­ருந்து விடு­விக்க இலங்கை கிரிக்கெட் நிறுவ­னத்­தினால் செலவி­டப்­பட்ட தொகையை ஐ.சி.சி. செலுத்­தாது என்று அறி­வித்­துள்­ளது.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரரும், விக்கெட் காப்­பா­ள­ரு­மான குசல் ஜனித் பெரேரா ஊக்கம­ருந்து உட்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்டில் கடந்த நவம்பர் மாதம் அவ­ருக்கு ஐ.சி.சி. இடைக்­காலத் தடையை விதித்­தது.

இந்தத் தடையை எதிர்த்து நடந்த சட்­ட­மூல நட­வ­டிக்­கையில் ஊக்­க­ம­ருந்து உட்­கொண்டார் என்ற அறிக்கை தவ­றா­னது என்றும், இதனால் குசல் மீது விதிக்­கப்­பட்ட தடையை உட­ன­டி­யாக நீக்கிவிடுவ­தா­கவும் ஐ.சி.சி. அறி­வித்­தது

இதை நிரூ­பிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் சுமார் 15 மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ளது. இதை ஐ.சி.சி.யிடம் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தது.

இந்­நி­லையிலேயே ஊக்­க­ம­ருந்து குற்­றச்­சாட்­டி­லி­ருந்து குசலை விடு­விக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் செய்த செல­வு­களை மீண்டும் செலுத்த உடன்­பாடு இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

அதா­வது ஊக்­க­ம­ருந்து பாவனை தொடர்­பாக வாடா நிறு­வனம் சான்­றிதழ் அளித்­த­கட்டார் ஆய்வின் முடி­வுகள் தொடர்பாக தமக்கு பொறுப்பு கூற முடி­யாது என்று ஐ.சி.சி. தெரி­வித்­துள்­ளது.

Related posts: